ஜெயலலிதாவின் மக்கள் ஆட்சிக்காக., அதிமுகவை தோற்கடியுங்கள்.! டிடிவி தினகரன் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம்., அம்மனூர்., தக்கோலம்., நெமிலி., பணப்பாக்கம் மற்றும் காவேரிப்பாக்கம் பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது., தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோதமான ஆட்சியும்., துரோகத்தின் ஆட்சியும் விரைவாக நிறைவு பெரும். வருகின்ற பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்ட மன்ற இடைத்தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை தோல்வியுற செய்யுங்கள். 

விவசாயிகள்., நெசவாளர்கள்., மீனவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என்று மாற்றத்தை விரும்பும் பலர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஆதரித்து வாக்களித்து அமோக வெற்றி பெற செய்யுங்கள்.  

நீங்கள் அளிக்கும் வாக்குகளின் மூலமாக ஜெயலலிதாவின் மக்களுக்கான ஆட்சியை அமைக்க முடியும் என்று தெரிவித்தார். 

English Summary

ttv dinakaran speech in vellore


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal