இந்து மதத்திற்கு எதிராக திமுக பேசுகிறது..!! ஊழல் என்றாலே திமுக தான்..!! டிடிவி தினகரன் ஆவேசம்..!! - Seithipunal
Seithipunal


மதுரையில் நடைபெற்ற அமமுகவின் திண்டுக்கல் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரஞ்சிதம் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் "பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடைபெற்று இருப்பது செய்தி வாயிலாக தெரிய வருகிறது. போடாத ரோடுகளுக்கு கூட பணம் பெறுகின்றனர். திமுக என்றாலே ஊழல் தான் என்பது போல திமுக அரசின் செயல்பாடு உள்ளது.

அனைத்து மதத்தினருக்கும் பொதுவானதாக முதல்வர் இருக்க வேண்டும். திமுக மதச்சார்பற்ற கூட்டணியில் இருந்து கொண்டு இந்து மதத்திற்கு எதிராக பேசி வருகிறது. திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. திமுக கூட்டணியில் பலமாக இருந்தாலும் மக்கள் நல்ல பாடம் புகட்டி தோல்வியை தருவார்கள். 

ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசு சரியான முறையில் கையாண்டு தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். இன்று அதிமுக நீதிமன்றத்தின் மூலம் செயல்படாமல் இருப்பதற்கு ஓபிஎஸ் இபிஎஸ்தான் காரணம். இவர்களின் பிரச்சனையால் அமமுக எதற்காக தொடங்கப்பட்டது என்பதை புரிய வைத்துள்ளது" என செய்தியாளர்கள் சந்திப்பில் டிடிவி தினகரன் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ttv dinakaran said DMK means corruption


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->