வெளியான காணொளி.! ஒன்று சேர்ந்த ஸ்டாலின்-தினகரன்.!! சிக்கலில் சிக்கிய எடப்பாடி.!! முழு விவரம்.!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் நேற்று முன்தினம் பத்திரிக்கையாளர்களை சாமுவேல் மேத்யூஸ் சந்தித்தார். அப்போது அவர் உருவாக்கிய ஜெயலலிதாவிய கொடநாடு மரணங்கள் தொடர்பான புலனாய்வு வீடியோவை வெளியிட்டார். அந்த காணொலியில் கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளைகள் குறித்தும் அதன்பிறகு நடைபெற்ற ஜெயலலிதா வாகன ஓட்டுனரின் மரணம் உள்ளிட்டவை குறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தின் போது காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விவரங்களும், அந்த காணொலியில் இடம்பெற்றுள்ளன. மேலும், கோடநாடு எஸ்டேட்டில், 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நகை, பணம் இருந்ததாகவும், அதிமுகவின் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைவரிடமும் வாங்கப்பட்ட மன்னிப்பு கடிதங்கள் இருந்ததாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடநாட்டில் கொள்ளை நடந்த போது அதில் ஈடுபட்ட கனகராஜ் யாருக்காக இதை செய்தார்? என்றும், இந்த கொள்ளை சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சில முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் சாமுவேல் மேத்யூஸ் தனது ஆவணப் படத்தில் காட்டியுள்ளார். அந்த முக்கிய அரசியல்வாதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்ற தகவலும் வேகமாக பரவி வருகிறது. 


இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, ''கடந்த 2017-ம் ஆண்டு கோடநாடு இல்லத்தில் நடைபெற்ற மர்ம மரணங்கள் தமிழகத்தையே உலுக்கியது. அச்சம்பவங்களின் பின்னணியில் பதவியில் இருக்கும் ஏதோ ஒரு பெரும்புள்ளிக்கு தொடர்பு இருப்பதாக அப்போதே செய்திகள் வெளியாகின.  தற்போது இதுகுறித்து தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மேத்யூஸ் இச்சம்பத்தின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

மேலும் இக்குற்றச் சம்பவத்தின் பின்னணியில் பதவியில் இருப்பவரது பெயரே சுட்டிக்காட்டப்பட்டுள்ளதால் மத்திய, மாநில அரசுகளின் கீழுள்ள எந்த விசாரணை  அமைப்பு இதனை விசாரித்தாலும் சரிவராது. அதை கண்காணிக்கும் விதமாக பதவியிலுள்ள ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் அந்த விசாரணையை நடத்த வேண்டும். இல்லையேல் நீதிமன்றமே தாமாக முன்வந்து தனது முழு கட்டுப்பாட்டில் இந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும்'' என தினகரன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக 'அ.தி.மு.க வின் கிரிமினல் கேபினட் கொடநாட்டில் கொலை செய்து கொள்ளை அடித்திருக்கும் செய்திகள் வெளிவந்திருக்கின்றன; குற்றவாளிகளின் இந்த அரசு ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கக்கூடாது. இவர்களைப் பாதுகாத்து வரும் மத்திய அரசு உடனடியாக இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும்' என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran open talk about kodanadu murders


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal