சசிகலாவுக்கு செக் வைக்கும் தினகரன்! பலே திட்டத்துடன் டிடிவி!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இம்முறை உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இந்த அறிவிப்புடன் தேர்தல் ஆணையம் தினகரனுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியை தெரிவித்தது. 

அது என்னவென்றால் அமமுக கட்சியை தேர்தல் ஆணையம் பதிவு செய்துவிட்டதாக தெரிவித்தது. இந்த தேர்தலில் பொது சின்னம் பெற்றுவிடலாம் என்று நினைத்த தினகரன் எண்ணம் தற்போது நிறைவேறாமல் போய் உள்ளது. ஏனென்றால் இந்த தேர்தலில் பொது சின்னம் வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

பொது சின்னம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு கட்சியை பதிவு செய்தது குறித்து எந்த விஷயமும் தெரியாது என அமமுகவினர் சிலர் தெரிவிக்கின்றனர். 

சிறையிலிருந்து வெளியே வந்ததும் ஒருங்கிணைந்த அதிமுகவாக இயக்க வேண்டும் என்பதுதான் சசிகலாவின் ஆசை. ஆனால் தினகரன் அமமுகவை, அதிமுகவுடன் இணைக்க விடக்கூடாது என்று உள்ளதாக கூறப்படுகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு எதிராக ஒரு தனி அணியை உருவாக்க வேண்டும் என்று தினகரன் திட்டங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது.

வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு ரஜினி எப்படியும் கட்சி தொடங்கி விடுவார். ஆகையால் அவரிடம் தற்போது  ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ரஜினி இன்னும் பிடிகொடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran master plan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->