அப்போது 50 லட்சம்.. இப்போது 25 லட்சமா.? துரோகம்.. எடப்பாடி மீது பாயும் டிடிவி தினகரன்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்ந்துள்ளது. 2,27,575 பேர் கொரோனா தொற்றிலிருந்து  குணமாகி பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர். 4,690 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தடுப்பு பணியில் நேரடி களப்பணியாற்றி வரும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் மக்கள் களப்பணியாளர்களான தூய்மை பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசுத்துறையை சார்ந்த பலருக்கும் கொரோனா உறுதியாகி வருகிறது. மேலும், கொரோனவால் முன் களப் பணியாளர்கள் உயிரிழந்தால், அவர்கள் குடும்பத்தினருக்கு தலா 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.

இந்நிலையில்,  கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட களப்பணியாளர்கள் சிலர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த முன் களப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுயிருந்தது.

இந்நிலையில்,  இந்த அரசாணைக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டிவிட்டரில் பதிவு செய்தவை, கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு இன்னுயிரை இழக்கும் முன்களப்பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்த  நிலையில், தற்போது அந்த நிதி ரூ.25 லட்சமாக குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

கொரோனா தடுப்புப்பணிகளில் ஆரம்பம் முதலே 'சொல்வது ஒன்று ; செய்வது வேறொன்று' என செயல்படும் தமிழக அரசின் இந்த அறிவிப்பு உயிரைப்  பணயம் வைத்து பெருந்தொற்று  நோய்க்கு எதிராக போராடியவர்களுக்குச் செய்யும் துரோகமாகும்.

எனவே, முன்பு அறிவித்தபடியே கொரோனா தடுப்புப்பணிகளில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு அளித்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என பதிவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran condemns for tn cm


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->