நானும் பன்னீர்செல்வமும்., மனம் திறந்த டிடிவி தினகரன்! - Seithipunal
Seithipunal


இன்று மகாத்மா காந்தி பிறந்த நாள், காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு தஞ்சையில் இருவரின் உருவப்படத்திற்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவிக்கையில், "நவம்பர் மாதம் ஆறாம் தேதி தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளதால் இந்த விவகாரம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது.

வருகின்ற 2024 மக்களவை பொதுத்தேர்தலோடு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் நடைபெறலாம். தற்போதைய தமிழகத்தின் சூழ்நிலையை பார்த்தால் ஆட்சி கலைக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. அந்த அளவிற்கு சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருக்கிறது.

நாங்கள் தனியாக பிரிந்து வரவில்லை. சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இயக்கத்தின் மூலம் சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

வருகின்ற மக்களவைத் தேர்தலில் கூட்டணி வைத்து தான் தேர்தலை சந்திக்க உள்ளதாக ஏற்கனவே தெரிவித்து விட்டேன். நான் என்ன சொல்கிறேனோ அதைதான் பன்னீர்செல்வம் சொல்கிறார். எங்களுடைய கருத்துக்கள் ஒன்றாக இருக்கிறது. நான், ஓபிஎஸ், சசிகலா நேரம் வரும்போது ஒன்றிணைவதில் எந்த தவறும் இல்லையே? சொல்லப்போனால் எடப்பாடி பழனிசாமி கூட நேரம் வரும்போது எங்களுடன் இணையலாம்" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran Say About OPS Sasikala EPS OCt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->