முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பு - கண் துடைப்பு நாடகம், மக்களை ஏமாற்றும் செயல்.! சொன்னது யார் தெரியுமா?   - Seithipunal
Seithipunal


பொங்கல் பரிசுத்தொகுப்பில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறியிருப்பது வெறும் கண் துடைப்பு நாடகம் என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பொங்கல் பரிசுத்தொகுப்பில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறியிருப்பது வெறும் கண் துடைப்பு நாடகம். 

தரமற்ற பொருட்கள் மக்களுக்கு போய் சேர்ந்த பிறகு இவர் நடவடிக்கை எடுப்பதால் என்ன பயன் ஏற்படப்போகிறது? 

பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டெண்டரிலேயே முறைகேடுகள் நடப்பதாக செய்திகள் வெளியான போது அதனைத் தடுத்து நிறுத்திட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தோம். 

அப்போதெல்லாம் விட்டுவிட்டு தரமற்ற பொங்கல் பரிசு தொகுப்புகள் விநியோகம் முடிந்த பிறகு ஆலோசனை, நடவடிக்கை என்பதெல்லாம் மக்களை ஏமாற்ற செய்யும் வேலைதானே?!

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV DHINAKARAN SAY ABOUT CM PONGAL GIFT ISSUE


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->