அதிமுகவுடன் அமமுக கூட்டணி இல்லை.! ஆனால்., கூட்டணி உண்டு., டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி.!  - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் ஒரு மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளன.

அந்த வகையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன், கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முதல் கூட்டணி தொகுதி பங்கீடு அதிமுக - பாமக இடையே ஏற்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் முடிவாகி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுடன் தொகுதி பங்கீடு குறித்து அமித்ஷா முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக பாஜகவின் மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்திருந்தார்.

மேலும், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ், தேமுதிகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையே, அதிமுக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைய வேண்டும் என்று பாஜக விருப்பம் தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதற்க்கு பாஜக மாநில தலைவர் எல் முருகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அதிமுகவுடன் அமமுக கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை என்று சற்றுமுன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

மேலும், திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது தான் எங்கள் இலக்கு என்றும், இதற்காக நாங்கள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV DHINAKARAN SAY ABOUT ADMK alliance


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->