வீரத்திருமகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாள் - டிடிவி தினகரன்.! - Seithipunal
Seithipunal


ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசென்ற மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.

இன்றைய நாளில் அவரின் வீரதீர செயல்கள் குறித்தும், அவரின் அளவற்ற நாட்டுப்பற்று குறித்தும் நாட்டின் அரசியல்கட்சி தலைவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள செய்தியில், 

நம் தாய்த்திரு நாட்டின் தவப்புதல்வர், ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தைக் கூர்மைப்படுத்திய கள நாயகர், வீரத்திருமகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாள் இன்று!

வங்கத்தில் பிறந்து, இந்தியா முழுவதையும்  வசீகரித்ததோடு, தமிழர்களையும் தமிழ்நாட்டையும் பெரிதும் நேசித்த மாவீரர் நேதாஜியின் பெருமைகளையும் தியாகங்களையும் எந்நாளும்  போற்றி வணங்கிடுவோம்!

இவ்வாறு அந்த செய்தியில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV DHINAKARAN NETHAJI SUBHASH CHANRA BOSS


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->