மத்திய அரசின் கண்டிக்கத்தக்க செயல்.. டிடிவி தினகரன் கொந்தளிப்பு.! - Seithipunal
Seithipunal


தேசிய கல்விக் கொள்கையை பல பிராந்திய மொழிகளில் வெளியிட்டுள்ள மத்திய அரசு, தமிழ் மொழியில் மட்டும் அதனை வெளியிடாதது கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு தேசிய கல்விக்கொள்கை ஆவணத்தை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் ஏற்கனவே வெளியிட்டு இருந்த நிலையில், நேற்று தமிழ் இல்லாமல் கன்னடம், மலையாளம், குஜராத்தி உட்பட 17 பிராந்திய மொழிகளில் தேசிய கல்விக்கொள்கை ஆவணம் வெளியிடப்பட்டது. 

தமிழ் மொழியில் தேசிய கல்விக்கொள்கை வெளியிடாதது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விஷயம் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டன ட்விட் பதிவு செய்துள்ளார். இது தொடர்பான ட்விட்டர் பதிவில், " தேசிய கல்விக் கொள்கையை பல பிராந்திய மொழிகளில் வெளியிட்டுள்ள மத்திய அரசு, தமிழ் மொழியில் மட்டும் அதனை வெளியிடாதது கண்டனத்திற்குரியது. 

புதிய கல்விக் கொள்கையை பொறுத்தமட்டில் உரிய திருத்தங்களையும், மாற்றங்களையும் கொண்டுவர வேண்டுமென அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியிருந்த நிலையில், இறுதி செய்யப்பட்ட கொள்கை வடிவத்தை இதுவரை தமிழில் வெளியிடாததை ஏற்க முடியாது.  மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, தமிழ் மொழியிலும்  அதை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran Condemn about Central Govt Educational Policy Tamil Language 25 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->