நடக்காதுனு சொன்ன செங்கோட்டையன்., நடத்தி காட்டும் எடப்பாடி.!? என்னதான் நடக்குது.?!  - Seithipunal
Seithipunal


அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்தியகூறுகள் இப்போதைக்கு இல்லை’ என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சொன்ன அதே நாளில், பள்ளிகளைத் திறப்பதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுகிறார் என்றால் நிர்வாகத்தில் என்னதான் நடக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து தினகரன், "பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மனநிலையையும்,கொரோனா தாக்கம் குறித்த உண்மை நிலையையும் உணர்ந்தே தமிழகஅரசு முடிவெடுக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு,‘எடுத்தோம்,கவிழ்த்தோம்’ என்று பள்ளிகளைத்திறந்து மாணவச்செல்வங்களின் உயிரோடு விளையாடுவது சரியாகஇருக்காது.

‘தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்தியகூறுகள் இப்போதைக்கு இல்லை’ என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சொன்ன அதே நாளில், பள்ளிகளைத் திறப்பதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுகிறார் என்றால் நிர்வாகத்தில் என்னதான் நடக்கிறது? 

அடுத்த சில மணிநேரங்களில் உகந்த சூழல் ஏற்பட்டுவிட்டதா?  மிக முக்கியமான பிரச்சினையில் கூட ஏன் இவ்வளவு குழப்பம்? என்ற கேள்விகள் மக்களிடம் எழுந்திருக்கின்றன. ஆட்சியாளர்கள் இதனைப் புரிந்து நடந்து கொள்வார்களா?." என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dhinakaran angry about tn school opening date issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->