மொத்தமா வாஷ்-அவுட்., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் படுதோல்வி.! வெளியான தேர்தல் முடிவு.! - Seithipunal
Seithipunal


திரிபுரா மாநிலத்தில் நடந்து முடிந்த பழங்குடியினர் தன்னாட்சிப் பகுதி கவுன்சில் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் படு தோல்வி அடைந்துள்ளன.

திரிபுரா மாநிலத்தில் பல ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் பெரும் செல்வாக்கோடு இருந்து வந்தன. இந்நிலையில் இன்று வெளியான கவுன்சில் தேர்தல் முடிவில் இரண்டு கட்சிகளும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்துள்ளது.

குறிப்பாக திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்து வந்த நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில், பழங்குடியினர் தன்னாட்சிப் பகுதி கவுன்சில் 28 இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது. இதேபோல் மாநிலக் கட்சியான திரிபுரா ஆதிமக்கள் முன்னேற்ற கூட்டணி போட்டியிட்டது.

இன்று வெளியான தேர்தல் முடிவில், திரிபுரா ஆதிமக்கள் முன்னேற்ற கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 9 இடங்களில் வென்றது. சுயேட்சை ஒருவரும் வெற்றி பெற்றார். 

அதே சமயத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சிகள் ஒரு இடத்தில கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியை தழுவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TRIPURA STATE LOCAL ELECTION


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->