திமுகவில் வெடித்தது அதிருப்தி?! இது அநீதி., தனக்கு கிடைக்க வேண்டியது போய்விட்டதே?!  - Seithipunal
Seithipunal


வரும் 14ம் தேதி மாநிலங்களவை துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என ராஜ்யசபா செயலர் அறிவித்துள்ளார். மாநிலங்களவை துணைத்தலைவர் பதவிக்கு பொதுவேட்பாளரை நிறுத்த தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போதைய மாநிலங்களவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 123 எம்பிக்களின் ஆதரவு தேவை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 117 ஆக உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பலம் 60 ஆக உள்ளது. திரிணாமுல், இடதுசாரிகள் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளின் பலம் 67 ஆகவும் உள்ளது. 

எனவே, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், பிற எதிர்க்கட்சிகளும் இணைந்தால் மட்டுமே பாஜக கூட்டணி வேட்பாளரை தோற்கடிக்க முடியும் என்ற நிலை உள்ளது. முதல் கட்டமாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளரை நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளிடம் குலாம் நபி ஆசாத் பேச்சுவார்த்தை நடத்து உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மாநிலங்களவை துணை தலைவருக்கான பொது வேட்பாளராக காங்கிரஸ் முடிவு செய்ததாகவும், ஆனால் அந்த வாய்ப்பை திமுக தலைமை ஏற்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கு சொல்லப்படக்கூடிய காரணம், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டால் திமுகவுக்கு வெற்றி கிடைக்காது என்று கூறப்பட்டதால், திமுக இந்த நிலைப்பாட்டை எடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தேசிய அளவில் தனக்கு கிடைக்க வேண்டிய பகுதியை திமுக தடுத்து விட்டதால் திருச்சி சிவா மிகுந்த அதிருப்தியில் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TRICHY SIVA angry to dmk head


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->