திருச்சியில் பெரும் அதிர்ச்சி.! காவல்துறைக்கே காசு கொடுத்து சிக்கிய கேஎன் நேரு.! - Seithipunal
Seithipunal


திருச்சி மேற்கு தொகுதி உட்பட்ட காவல் நிலையங்களில், காவலர்களின் தபால் வாக்குகளை பெறுவதற்காக, கவர்களில் பணம் வைத்து திமுக வழங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக காவல் ஆய்வாளர் உட்பட ஆறு பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் காவலர்கள், ஆசிரியர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்களது வாக்குகளை தபால் வாக்கு மூலம் கடந்த சனிக்கிழமை முதல் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மேற்குத் தொகுதி உட்பட்ட தில்லை நகர், அரசு மருத்துவமனை, நீதிமன்றம், எடமலைப்பட்டிபுதூர், கண்டோன்மென்ட் உள்ளிட்ட ஆறு காவல் நிலையங்களில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அவர்களின் தகுதிக்கேற்ப 5000 முதல் 2000 வரை கவரில் வைத்து பணம் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காவல் ஆய்வாளர் காவலர்கள் உட்பட 90 க்கும் மேற்பட்ட கவர்களில் பணம் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை திமுகவை சேர்ந்த கே என் நேரு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகவல் அறிந்த காவல் ஆணையர் லோகநாதன் மற்றும் வருமான வருவாய் துறையினர் நடத்திய விசாரணையில், காவல் ஆய்வாளர் சிவக்குமார், எழுத்தாளர் பாலாஜி உள்ளிட்ட 6 பேர் பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் லோகநாதன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த காலம் சென்று, தற்போது காவலர்களுக்கு பணம் கொடுக்கும் திமுகவின் இந்த அராஜகப் போக்கு, திருச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trichy kn nehru break election rule


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->