பிரியாணிக்காக அடித்து கொண்டு! தள்ளு முள்ளில் ஈடுபட்ட திமுக கழக உடன்பிறப்புக்கள்!! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 9 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டது, இதில் திருச்சி தொகுதியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் முன்னாள் திருநாவுக்கரசு திருச்சி மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

திருச்சி மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதால், திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில், திமுக எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கலந்து கொள்ளவில்லை. வெற்றி பெற்ற வேட்பாளரே நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளாதது தொண்டர்கள் இடையே சிறு சலசலப்பை ஏற்படுத்தியது 

நன்றி தெரிவிக்கும் கூட்டம் முடிந்த பின்னர், திமுக சார்பில் பிரியாணி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, பிரியாணி வாங்க திமுகவினர் போட்டிபோட்டுகொண்டு தள்ளுமுள்ளில் ஈடுபட்டதால் ஒருவர் மீது ஒருவர் பிரியாணியை கொட்டிக்கொண்டு, கீழே விழுந்து எழுந்தனர். 

English Summary

trichy dmk meeting


கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
Seithipunal