தமிழகத்தில் நான் இந்த தொகுதியில் போட்டியிடுவது உறுதி.! ட்ராபிக் ராமசாமி அதிரடி பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், டிராபிக் ராமசாமி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

ட்ராபிக் ராமசாமி இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, "சென்னையில் அனுமதியின்றி பேட்டரி பொருத்தப்பட்ட மீன்பாடி வாகனங்கள் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெற்று உள்ளேன்.

அதே சமயத்தில், நெல்லை மாநகராட்சியில் எந்தவித பதிவும் இல்லாமல், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் பேட்டரி வாகனம் ஓட்டி வருகிறார்கள். இது சட்ட விரோதமான ஒரு செயல்.

சட்ட விதிகளுக்கு உட்பட்டு அந்த வாகனங்களை இயக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் நான் வலியுறுத்தி உள்ளேன். மாநகராட்சி ஆணையர் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன்" என்று தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் நீங்கள் போட்டியிட வாய்ப்பு உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த டிராபிக் ராமசாமி,

"வரும் சட்டமன்ற தேர்தலில் ஊழலை ஒழிக்க நல்லாட்சி இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை தொடங்கி உள்ளேன். மக்கள் என்னை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வலியுறுத்தி உள்ளார்கள். நான் நிச்சயம் அந்த சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவேன்" என்று டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

traffic ramasamy in assembly election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->