என்னது உங்க சின்னதுல நிக்கணுமா.! ஆள விடுங்க.. உங்க சங்காத்தமே வேணாம்.!! தப்பிவந்த தலைவர் பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் தேர்தல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது, அரசியல் கட்சிகள் அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு மேலும் பரபரப்பரப்பை உண்டாக்கி வருகின்றனர். சிறிய கட்சி முதல் தேசிய கட்சிவரை தொகுதி, வேட்பாளர் பட்டியல் என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக கட்சியான இலட்சிய திராவிட முன்னேற்ற கழகமும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது. இன்று அந்த கட்சியின் தலைவர் டி.ராஜேந்தர், மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் விண்ணப்பங்களை பெற்று கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், ''தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக ஒரு அணியை உருவாக்க நான் திட்டமிட்டுள்ளேன். நடிகர் சரத்குமார் தனியாக போட்டியிட உள்ளார். கமல் கட்சி தொடக்கி அவரும் தனித்து நிற்கிறார், சீமான் தனித்து போட்டியிடுகிறார். நானும் தனித்தே நிற்கிறேன்.

ஆனால், மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள். நாங்கள் வெற்றி பெறுவதற்காக தேர்தலில் போட்டியிடவில்லை. சிலர் வெற்றி பெற கூடாது என்பதற்காக தேர்தலில் நிற்கிறோம். அவர்களுக்கு செல்லும் வாக்குகளில் குறைந்தபட்சம், 100 ஓட்டுக்களையாவது சிதற வைப்பதற்கு எனக்கு பலம் இருக்கிறது.

திமுக, அதிமுக என்ற 2 கட்சியை நான் ஆட்டிப்படைப்பேன்'' என்று சரமாரியாக பேசிய டிஆர். தனது பாணியில், இயங்கிக் கொண்டிருந்தால் தான் அது இயக்கம், கூட்டணிக்காக ஏங்கிக் கொண்டிருந்தால் அது மயக்கம் என்று தெறிக்கவிட்டார்.

முத்தாய்ப்பாக அவர் கூறியதில், ''என்னை ஒரு பெரிய கட்சி அவர்களது சின்னத்தில் நிற்க வற்புறுத்தினார்கள், ஆனால் நான் அதை ஏற்கவில்லை. நான் சத்திரியன், இப்போது நான் விவேகமான சாணக்கியன்'' என்று டி.ராஜேந்தர் கூற செய்தியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TR NEXT MOVE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->