தீவிரமடைந்தது போராட்டம்.! அடுத்தடுத்து வெளியான அறிவிப்பு.!! சிக்கலில் சிக்கும் தமிழக அரசு.!!! - Seithipunal
Seithipunal


ஏழாவது நாளாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறது. ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டு நாளை தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு வர உள்ளனர்.

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு போராட்டத்தை ஒடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், போராட்டம் குறையாமல் மேலும் தீவிரமடையவே செய்துள்ளது. இன்று தமிழகம் முழுவதும் போராட்டத்தை தொடங்கிய ஜாக்டோ-ஜியோ அமைப்பு பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகிறது. 

நாகை, நாமக்கல், திருவள்ளூர், கோவை, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட 2000 ஆசிரியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிறை நிரப்பும் போராட்டத்தை ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவித்து இருப்பது மேலும் தமிழக அரசுக்கு நெருக்கடியை கொடுக்க உள்ள நிலையில்,  ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, நாளை காலவரையற்ற போராட்டத்தில் தேர்வுத்துறை ஊழியர்களும் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். 

இது சம்மந்தமாக தேர்வுத்துறை ஊழியர்கள் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ''நாளை முதல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக'' தெரிவித்துள்ளனர். பிப்.1ஆம் தேதி செய்முறை தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், பணிகள் பாதிக்காது என்றும், திட்டமிட்டபடி பிப் 1 அன்று செய்முறை தேர்வுகள் நடக்கும் என்று தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தலைமை செயலக ஊழியர்கள், தங்களின் சங்க அலுவலகம் முன்பு, காத்திருப்பு போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த தலைமை செயலக ஊழியர்களின் போராட்டத்தால் தலைமை செயலக பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதன் அடுத்த அறிவிப்பாக, அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கமான தொ.மு.ச -வின் பொதுச்செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ''ஜாக்டோ-ஜியோவுக்கு ஆதரவாக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்'' என்று அறிவித்துள்ளார். மேலும், நிதிநிலை சரியில்லை என்பது அரசின் கையாலாகா தனத்தை காட்டுவதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை முதலவர் அழைத்து பேச வேண்டும் என கோரிக்கைக்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TOMORROW PROTEST ANNOUNCEMENT IN TN GOVT STAFFS


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->