உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட உச்சநீதிமன்றம்!  - Seithipunal
Seithipunal


புதிய மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையறை செய்யவில்லை எனக் கூறி உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்க உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 27 மட்டும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலானது முறையான நடைமுறைகளை பின்பற்றி நடைபெறவில்லை என குற்றம்சாட்டி, திமுக உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழகத்தில் அண்மையில் புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்ய வில்லை என கூறி திமுக வழக்கு தொடர்ந்திருந்தது. அதைப்போல புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்தும் ஒவ்வொரு வாக்காளர்கள் தேர்தலை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்கள். 

இந்த வழக்கு விசாரணையானது இன்று அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிய மாவட்டங்கள் வார்டு வரையறை செய்யாமல் தேர்தலை நடத்த முடியுமா? மூன்று மாவட்டங்களுக்கு சேர்த்து ஒரே ஒரு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் இருப்பாரா என்ற கேள்விகளையெல்லாம் வைத்தனர். அதேபோல தேர்தல் ஆணையம் சார்பில் தமிழக அரசு தரப்பிலும் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மீதி உள்ள மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த  நாங்கள் தயாராக இருக்கிறோம் என அறிவித்திருந்தனர். 

இவ்வாறு காரசாரமாக சென்ற இந்த வழக்கு விசாரணையானது தீர்ப்பு அளிக்காமல் ஒத்திவைக்கப் பட்டது.  இதனையடுத்து நாளை காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என அறிவிக்கபட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி ஏ எஸ் பாப்டே அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை முதல் வேட்பு மனு தாக்கல் செய்வது தொடங்கும் நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா நடைபெறாதா என்பது நாளை காலை பத்தரை மணிக்கு தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tomorrow morning supreme court give verdict dmk case of local body polls


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->