ஆளும் கட்சியில் இணையப்போகும் முன்னாள் எம்எல்ஏக்கள்! முதலமைச்சர் தகவல்!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைத்து மதச்சார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆட்சி அமைத்தன. ஒன்றரை வருடங்கள் நீடித்த இந்த ஆட்சியானது கடந்த 2 மாதங்களுக்கு முன்பு போதிய பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் கவிழ்ந்தது. 

அதன்பிறகு தற்போது பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணமாக இருந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரையும்  தகுதி நீக்கம் செய்து அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 17 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் எனவும், கர்நாடக சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என உத்தரவிட்டு உள்ளது. அதே சமயம், அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்களும் நாளை பாஜகவில் இணைகின்றனர் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். உச்சகட்ட பரபரப்பில் காங்கிரஸ்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tomorrow 17 ex mla join bjp


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->