மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி! பாஜக எடுத்த திடீர் முடிவு!  - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டசபை த் சட்டசபை தேர்தலுக்கு பின்னர், ஏகப்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு பிறகு தற்போது சிவசேனா தேசியவாத காங்கிரஸ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து புதிய அரசை அமைத்துள்ளது. 

இந்த அரசானது தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டசபையில் நடைபெற்றது. மொத்தம் 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு பெரும்பான்மைக்கு 145 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய உத்தவ் தாக்கரே அரசுக்கு 169 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது. 

நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் இந்த சபையானது உரிய விதிகளை பின்பற்றி கூட்டப்படவில்லை எனக்கூறிய தேவேந்திர பட்னாவிஸ்க்கு, இடைக்கால சபாநாயகர் ஆளுநரின் உத்தரவுப்படி முறையான விதிகளை பின்பற்றி தான் சபை கூடி உள்ளதாக தெரிவித்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் முன் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சித் எம்எல்ஏக்கள் அனைவரும் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். 

இதனையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில் 169 உறுப்பினர்கள் ஆதரவு பெற்ற உத்தவ் தாக்கரே அரசு வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிவசேனா 56 தேசியவாத காங்கிரஸ் 54 காங்கிரஸ் 44 உறுப்பினர்களை வைத்திருக்கும் நிலையில் மேலும் 15 உறுப்பினர்களின் ஆதரவும் இந்த அரசுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today vote of confidence held in the Maharashtra Assembly


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->