இன்று முதல் தொடக்கம்.. அனல்பறக்கும் தமிழக தேர்தல் களம்! மகிழ்ச்சியில் மக்கள்!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் ஒருவழியாக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. 

உள்ளாட்சித் தேர்தலில் இம்முறை இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் வருகிற 27ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற 30ம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.மேலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பின்னர் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 16 ஆம் தேர்த்தி ஆகும். டிசம்பர் 17 மனுக்கள் பரிசீலனை, 19ஆம் தேதி மனுக்களை திரும்ப பெறலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today local body election nomination start


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->