இன்று மாலை முக்கிய இடத்துக்கு பயணமாகும் எடப்பாடி பழனிச்சாமி., வெளியாகும் புதிய உத்தரவுகள்!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசன விழா, தற்போது நடைபெற்று வருகிறது தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதர் தரிசித்து செய்து வருகின்றனர். அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும், தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.

பக்தர்களின் கூட்ட கூட்ட நெரிசல் சமாளிப்பதற்காக அத்திவரதர் சிலையை இடமாற்றம் செய்வது குறித்து அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் கடந்த 20 ஆம் தேதி முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி, நகராட்சி நிர்வாக துறை முதன்மைச் செயலாளர் அரசின் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராஜேஷ், இந்து சமய அறநிலையத் துறை முதன்மை செயலாளர் பணீந்திர ரெட்டி, போக்குவரத்து கழக தலைமை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

இதற்கிடையே, பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அத்திவரதரை சிலையை வேறு இடத்துக்கு மாற்றி வைக்க முடியுமா என்பது குறித்து கோயில் குருக்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டகாக சேலத்தில் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் , அத்திவரதர் தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுதா என்பது குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 6 மணிக்கு நேரில் செல்கிறார். அங்கு அத்திவரதர் வைக்கப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளார். ஆய்வின் முடிவில் அத்திவரதர்  தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பல்வேறு உத்தரவுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுக்கு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அத்திவரதரை  தரிசனம் செய்ய இருக்கிறார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today evening edapadi palanisamy going to kanjipuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->