கோவில்களில் இனி இலையில் சோறு., அமைச்சர் அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நாளை முதல் தமிழக கோயில்களில் இலையில் அன்னதானம் வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

"இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 754 திருக்கோயில்களில், தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்களில் நாள் முழுதும் அன்னதானம் திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

கடந்த 16.9.2021 அன்று முதல்வர், திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருத்தணி அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களில் நாள்முழுதும் அன்னதானம் திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். இத்திட்டம்
பக்தர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக திருக்கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம் இலையில் பரிமாறப்படாமல் உணவுப்பொட்டலங்களாக அனைத்து நாள்களிலும் (வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு உட்பட) பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நடைமுறையினை மாற்றி பின்வரும் முறையில் அன்னதானம் திருக்கோயில்களில் நாளை முதல் (20.9.2021) வழங்கப்படும்,

திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை அனைத்து அன்னதானம் வழங்கும் திருக்கோயில்களிலும் அன்னதானக்கூடங்களில் சமூக இடைவெளியுடன் பக்தர்களுக்கு அன்னதானம் இலையில் பரிமாறப்படும்.

வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாள்களில் அன்னதானம் உணவுப்பொட்டலங்களாக பக்தர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும்." என்று அமைச்சர் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn temple leaf food


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->