மாணவர்கள் யாரும் இனி பள்ளிக்கு வர வேண்டாம்.! ஆல் பாஸ் அறிவிப்பை தொடர்ந்து அடுத்த அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நடப்பு கல்வியாண்டில் 9 10 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுத் தேர்வுகள் எதுவுமின்றி தேர்ச்சி என அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

கொரோனா காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த வருடம் அனைவருக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது வரை பள்ளிகள் தொடங்காமல் இருக்கும் நிலையில். 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த கல்வியாண்டிலும் ஒன்பது பத்து பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் எதுவும் இல்லாமல் அனைவரும் தேர்ச்சி என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு மட்டும் பொதுத் தேர்வு நடைபெறும் என தெரியவருகிறது. இதன்மூலம் எல்கேஜி முதல் 8 வகுப்பு வரையான மாணவர்களும் அனைவரும் கண்டிப்பாக தேர்ச்சி அளிக்கப்பட்டு அடுத்த வகுப்புக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என்று ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

தமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என அறிவிப்பு வெளியான நிலையில், 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என்று ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஜூன், ஜூலை மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும் பொது பள்ளிக்கு வந்தால் போதும் என்று ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn school teacher announcement


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->