விஜயகாந்துடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு!  - Seithipunal
Seithipunal


தேமுதிக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழக முதலமைச்சர்எடப்பாடி.K.பழனிச்சாமி  இன்று (25.09.2019) மாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடைபெற இருக்கும் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேமுதிக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களிடமும், கழக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களிடமும் ஆதரவு கேட்டுக்கொண்டார். 

 அதிமுக அமைச்சர்கள் மின்சாரத்துறை அமைச்சர் திரு.தங்கமணி அவர்கள், மீன்வளத்துறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் அவர்கள், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் திரு.சீனிவாசன் அவர்கள் தேமுதிக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்து அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு கேட்டுகொண்டதுடன் மரியாதை நிமித்தமாகவும் சந்தித்தனர்"  என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN ministers meet with DMDK vijayakanth


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->