இந்தியாவில் எங்குமே இல்லாத மிகப்பெரிய திட்டத்துக்கு அனுமதி தந்த தமிழக அமைச்சரவை.! கொண்டாட்டத்தில் மாவட்ட மக்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த அக்டோபர் மாதம் வெளிநாடுகளிலிருந்து புதிய தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்திடவும், வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களிடமிருந்து அதிகளவில் முதலீடுகளை ஈர்த்திடவும் இங்கிலாந்தில் மூன்று நாட்கள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார்.

அங்கு சுகாதாரத்துறை சார்பில் 3 ஒப்பந்தங்களில் முதலமைச்சர் பழனிசாமி கையெழுத்திட்டார். தொழில் முதலீடுகளை ஈர்ப்பது குறித்து அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் விரிவான ஆலோசனை  நடத்தினர்.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கிங்ஸ் ஹாஸ்பிடலின்  கிளை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டன் கிங்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் நிர்வாகிகள் சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார்கள்.

கடந்த ஆண்டு முதலமைச்சர் லண்டன் சென்றிருந்த போது கிங்ஸ் மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அந்த சந்திப்பின்போது காஞ்சிபுரத்தில் கிங்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு, முதலமைச்சரின் முன்னிலையில் கிங்ஸ் மருத்துவமனைகளை தமிழகத்தில் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது, 2020-2021 ஆண்டுக்கான பட்ஜெட் உருவாக்கம், தமிழகத்தில் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்ட்டது. 

இதற்கிடையே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கிங்ஸ் ஹாஸ்பிடலின்  கிளை அமைக்க தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.உலக புகழ் பெற்ற கிங்ஸ் மருத்துவமனை காஞ்சிபுரத்து வருவதால் அந்த மாவட்ட மக்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn ministers cabinet approved kings hospital in tn


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->