பாஜக வெற்றி பெறுவது இருக்கட்டும்.. உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு..? அமைச்சர் செந்தில் பாலாஜியின் நக்கல்..!! - Seithipunal
Seithipunal


கோவையில் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஃபேல் வாட்ச் மூலமாக 25 தொகுதிகளில் பாஜக வெற்றிபெறும் என்று பேசி இருந்தார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட காது கேளாதூருக்கு வழங்கப்பட்ட கருவியின் விலையை பல மடங்கு உயர்த்தி கூறியது சர்ச்சை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் பாஜக வெற்றி பெறுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து பதில் அளித்த அவர் "பாஜக தமிழகத்தில் எங்கு உள்ளது. அந்தக் கட்சியில் எத்தனை பேர் உள்ளனர். தமிழகத்தில் எத்தனை வாக்குச்சாவடிகள் உள்ளது என்பது கூட தெரியாத கட்சி பாஜக. ரூ. 345 மதிப்புள்ள காது கேளாதோர் கருவியை கொடுத்துவிட்டு ரூ.10,000 என பொய் சொல்லக்கூடியவர் அண்ணாமலை. அவருடைய 37வது வயதில் 20,000 புத்தகங்கள் படித்துள்ளதாக பொய் சொல்கிறார்.

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது? கேஸ் சிலிண்டர் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது? சாமானிய மக்களின் நிலைமை என்ன? இதுகுறித்து அவர்களிடம் கேளுங்கள். நடந்து முடிந்த நகர்ப்புற தேர்தலில் கோவை மாநகராட்சியில் எத்தனை வார்டில் பாஜக வெற்றி பெற்றது. தமிழகத்தில் பாஜகவுக்கு எவ்வளவு வாக்கு வங்கி உள்ளது. முதலில் தமிழக பாஜகவில் எவ்வளவு உறுப்பினர் என்பதை கேட்டு சொல்லுங்கள். அதை வைத்து நகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை ஒப்பிட்டு பார்க்கலாம்" என அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழக பாஜகவை கலாய்த்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN minister Senthil Balaji teased TNBJP and Annamalai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->