#சற்றுமுன்: தமிழக அரசு பிறப்பித்த அதிரடி அரசாணை.! கொண்டாட்டத்தில் இரு மாவட்ட மக்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மேலும் 2 புராதான சின்னங்கள், பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக தமிழக அரசு அறிவித்து அரசாணை  வெளியிட்டுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், கீழ்ராவந்தாவாடி கிராமத்தில் உள்ள சிற்ப குலத்தினையும், அரியலூர் அழகர்கோவில் கிராமத்தில் உள்ள யானை சிற்பம் பாதுகாக்கப்பட்ட புராதன சின்னமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "தொல்லியல் துறை முதன்மை செயலாளர்/ ஆணையரின் செயல் குறிப்பினை ஏற்று, 1966ஆம் ஆண்டு தமிழ்நாடு பழங்கால வரலாற்று சின்னங்கள், தொல்லியல் சிறப்பிடங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 3 ஆம் பிரிவை சேர்ந்த (3) உட்பிரிவின் கீழ், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், இளையபெருமாள் நல்லூர், அழகர் கோவில் கிராமத்தில் உள்ள யானை சிற்பத்தினை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்படுகிறது. 

மேலும், திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், கீழ்ராவந்தாவாடி கிராமத்தில் உள்ள சிற்ப குலத்தினை (அம்மா குளம்) பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்படுகிறது" என்று தமிழக அரசின் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt order for temple statue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->