#BREAKING: பாலியல் புகாரில் சிக்கிய டிஜிபி., சற்றுமுன் தமிழக அரசு அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


காவல்துறையில் உயர் பதவியில் உள்ள ஒரு பெண் காவல் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டுள்ளதாக கடந்த 2 தினங்களாக காவல்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு காவல்துறை உயர் அதிகாரிகள் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டால் அது குறித்து விசாரணை செய்ய விசாக கமிட்டி அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கூடுதல் தலைமை செயலாளர் ஜெயஸ்ரீ ஐஏஎஸ் தலைமையில் 6 பேர் கொண்ட குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. புகாருக்கு உள்ளான அவர் ஐபிஎஸ் அதிகாரி என்பதால் பெண் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த குழுவின் தலைவர் பொறுப்பில் இருப்பவர் ஒரு பெண் அதிகாரி ஆகத்தான் இருக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அந்த உத்தரவில் தெரிவித்திருந்தது.

கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. 6 பேர் கொண்ட குழுவில் ஏடிஜிபி சீமா அகர்வால், ஐஜி அருண், டிஐஜி சாமுண்டீஸ்வரி, டிஜிபி அலுவலக தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ் பாபு, தன்னார்வலர் லோரட்டா ஜோனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு சற்றுமுன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்ததால் தற்போது தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN GOVT ORDER FOR DGP


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->