டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம்.. திமுக எம்பி தயாநிதி மாறன் மீது வழக்கு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பல ஆண்டுகளாக நடைபெற்ற மிகப்பெரிய முறைகேடுகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேர்வர்கள், இடைத்தரகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதனிடையே கடந்த 30ஆம் தேதி இந்த விவகாரம் குறித்து பேட்டியளித்த திமுக எம்பி தயாநிதி மாறன், டிஎன்பிசி தேர்வு முறைகேடு அமைச்சர் ஜெயகுமார் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. அவரை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என கூறியிருந்தார்.

இதையடுத்து அமைச்சரின் நற்பெயரை கெடுக்கும் வகையில் அவதூறாக கருத்துக்களை தெரிவித்தல் தயாநிதி மாறன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டத் துறை சார்பில் தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதையடுத்து அமைச்சர் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.  தயாநிதி மாறன் ஆதாரமில்லாமல் உண்மைக்கு புறம்பாக உள்நோக்கத்துடன் பேசி உள்ளதாகவும் அவர் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt case against dayanidhi maran


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->