எடப்பாடி பழனிச்சாமி, மரு. விஜயபாஸ்கர் முன்னிலை...! - Seithipunal
Seithipunal


தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடைபெற்று முடிந்திருந்தது. 

வாக்கு எண்ணிக்கை நாளான இன்று 75 வாக்கு மையங்கள் தமிழகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டு, வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, 8.30 மணிக்கு மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகள் எண்ணப்படவுள்ளது. 

இந்த தேர்தலில், அ.தி.மு.க. - தி.மு.க. - 130 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - காங்.- 14 இடங்களில் நேரடியாகவும், தி.மு.க. - பா.ஜ.க - 14 இடங்களில் நேரடியாகவும், தி.மு.க. - பா.ம.க. - 18 இடங்களில் நேரடியாகவும், தி.மு.க. - த.மா.கா. - 4 இடங்களில் நேரடியாகவும், காங். - த.மா.கா. - 2 இடங்களில் நேரடியாகவும், காங். - பா.ஜ.க 5 இடங்களில் நேரடியாகவும், காங். - பா.ம.க. 3 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - இந்திய கம்யூனிஸ்ட் - 5 இடங்களில் நேரடியாகவும், பா.ஜ.க - இந்திய கம்யூ - 1 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - மார்க்சிஸ்ட் கம்யூ. - 5 இடங்களில் நேரடியாகவும், பா.ம.க. - மார்க்சிஸ்ட் கம்யூ. - 1 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - விடுதலை சிறுத்தை கட்சிகள் - 5 இடங்களில் நேரடியாகவும், பா.ம.க. - வி.சி.க - 1 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - கொ.ம.தே.க. - 3 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - முஸ்லிம் லீக் - 3 இடங்களில் நேரடியாகவும் மோதுகிறது.

எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட நிலையில், 5,484 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். விராலிமலை தொகுதியில் போட்டியிட்ட மருத்துவர் விஜயபாஸ்கர் 5153 வாக்குகள் முன்னலையில் இருக்கிறார். திமுக வேட்பாளர் பழனியப்பன் 2620 வாக்குகள் பெற்றுள்ளார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Election 2021 Result Edappadi Palanisamy and Dr Vijayabaskar Leading


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->