#சற்றுமுன்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட திமுக கூட்டணி கட்சி.! - Seithipunal
Seithipunal


திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கீடு திமுக ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கி திமுக ஒப்பந்தம் போட்டுள்ளது.

ஐந்து கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பின்பே திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையேயான தொகுதிப் பங்கீடு மற்றும் எந்தந்த தொகுதி என்ற உடன்படிக்கை முடிவுக்கு வந்தது.

திமுக கூட்டணியில் கடைசியாகத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், சற்றுமுன் செய்திகள் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி, 

திருப்பரங்குன்றத்தில் பொன்னுத்தாய், கந்தர்வக்கோட்டை தனித்தொகுதியில் எம் சின்னதுரை, கோவில்பட்டி தொகுதியில் கே சீனிவாசன், திண்டுக்கல் தொகுதியில் பாண்டி, கீழ்வேளூர் தனித்தொகுதியில் மாலி, அரூர் தனித்தொகுதியில் குமார் போட்டியிடுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cpim CANDIDATE LIST


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->