தமிழக முதல்வர், கல்லூரி மாணவர்களுக்கு தெரிவித்த செய்தி!  - Seithipunal
Seithipunal


இந்திய நாட்டிலேயே உயர்கல்வி பயிலும் மாணவ - மாணவியர்களின் விகிதம் தமிழகத்தில் தான் அதிகம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பெரிமிதத்துடம் தெரிவித்துள்ளார்.

சத்யபாமா கல்லூரியின் 29-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, 

"தமிழகத்தில் ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்கும் சூழலை உருவாக்கி உள்ளோம். உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. முதல் 100 பல்கலைக்கழகங்களில் தமிழகத்தை சேர்ந்த 18 பல்கலைக்கழகங்கள் உள்ளன. 4 புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு கல்லூரிகளுக்கு உட்கட்டமைப்புக்காக தமிழக அரசு ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

மாணவர்கள் குறைந்த செலவில் தரமான கல்வி பெறுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அறிவுசார் சமுதாயம் அமைய அனைவருக்கும் கல்வி அவசியம். அனைவருக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்வதில் தமிழகம் முதல் மாநிலமாக விளங்குகிறது. மாணவ, மாணவிகள் kஅளவு கற்க தேவையான பல்வேறு உதவிகளையும், விலையில்லாப் பொருள்களையும் தமிழக அரசு வழங்கி வருகிறது" என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm talk to collage students


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->