புயலென பொங்கி எழுந்த முதலமைச்சர் பழனிசாமி! எழுதி கொடுப்பதை படிக்கும் ஸ்டாலினுக்கு என்ன தெரியும்?! - Seithipunal
Seithipunal


கோவையில் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "திமுக ஆட்சி காலத்தில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது? எவ்வளவு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன? என்று பதில் சொல்ல முடியுமா? இந்த வெளிநாட்டு பயணத்தின் மூலம் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.  தொழில் துவங்க எப்படியும் 3 அல்லது 4 ஆண்டுகள் வரை ஆகும். 

அதிமுக ஆட்சியில் ரூ.53 ஆயிரம் கோடி முதலீடுகள் பெறப்பட்டுள்ளன  இதுவரை பெறப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில் தொடங்க வெளிநாட்டு தொழிலதிபர்கள் முயற்சித்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நிலைமை குறித்து பேசி தெளிவுப்படுத்தவே வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளப்பட்டது என முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். 

மேலும் திமுக ஆட்சி காலத்தில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன?  அதிமுக ஆட்சியை விமர்சிக்க திமுகவுக்கு எவ்வித தகுதியில்லை, உபரி நீரை சேமிக்க ரூ.600 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகளை கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம், ஒரு சொட்டு நீர் கூட வீணாக கூடாது என்பதே எங்கள் நோக்கம். மேலும்  1,869 ஏரிகளை பரமாரிக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் எழுதி கொடுப்பதை பேசும் ஸ்டாலினுக்கு இதுபற்றி தெரிய வாய்ப்பில்லை என கூறிய முதல்வர், அதிமுக ஆட்சியின் செயல்பாடுகளை ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை, நாட்டை பற்றி கவலைப்படாத கட்சி திமுக  எனவும் குற்றம் சாட்டியுள்ளார். 

மத்திய அரசு நல்ல திட்டங்களை அறிவித்தால் ஆதரிப்போம், மேலும்  போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் விபத்தை கட்டுப்படுத்த முடியும், கேரள முதலமைச்சரை சந்திக்கும் போது பல்வேறு விஷயங்கள் குறித்து பேச உள்ளோம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Cm Slams DMK leader Stalin in Kovai press meet


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->