#சற்றுமுன்: மோடியிடம் தமிழக முதல்வர் வைத்த கோரிக்கை! வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!   - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், 7 மாநிலங்கள் மட்டுமே உள்ளன. கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களான தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா, கர்நாடகா, உ.பி, பஞ்சாப் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்த 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதலமைச்சர்கள் உடன் ஆலோசனை நடத்த உள்ளார் என மத்திய அரசு தெரிவித்தது. 

இந்தியாவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களான தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா, கர்நாடகா, உ.பி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் முதல் அமைச்சர்கள் மற்றும் சுகாதார மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்துவது குறித்து காணொலி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை செய்து வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக ஏற்கனவே தமிழகம் கோரியிருந்த நிதியை விடுவிக்க தமிழக முதலமைச்சர் வலியுறுத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் பிரதமரிடம் விளக்கம் கொடுத்து வருகிறார். தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணி தொடர்பாக பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் விளக்கம் அளித்து வருகிறார்.

மேலும், தமிழகத்திற்கு 3000 கோடி ரூபாய் நிதி உதவி தேவை என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசு மேற்கொண்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு, பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM request to PM MODI for relief fund


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->