உள்ளாட்சி தேர்தல் குறித்து முதலமைச்சர் பழனிசாமி பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 17 தொகுதிக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கும் வருகிற 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அந்த 4 தொகுதிகளும் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் அதிமுக  வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். 

இந்நிலையில், சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிமுகவுக்கு துரோகம் செய்து சிலர் வெளியே சென்றதால், இந்த இடைத்தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது. உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு நேரத்தில் திமுக தான்  நீதிமன்றத்திற்கு சென்று தேர்தலை நிறுத்தியது. இடைத்தேர்தலில் தோல்வி பயம் காரணமாகவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஸ்டாலின் கொண்டு வருகிறார். 

3 எம்எல்ஏக்களுக்கும், ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தம். இதன் மூலம் திமுக, அமமுகவுக்கு இடையேயான உறவு வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm press meet in selam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->