#சற்றுமுன்: தமிழக முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு.!  - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அன்று முதல் தற்போது வரை கர்நாடக மாநில பேருந்துகள் தமிழகத்திற்குள் இயக்கப்படாமல் உள்ளது. மேலும் தமிழக பேருந்துகளும் அம்மாநிலத்துக்குள் செல்லவில்லை. 

கடந்த நவம்பர் மாதத்துக்கான ஊரடங்கு தளர்வுகளில் தமிழக அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. அனால் மாநிலங்களுக்கிடையேன பேருந்து சேவை குறித்த அறிவிக்கள் வரவில்லை. அதே சமயத்தில், கர்நாடக மாநிலத்தில் இருந்து ஆந்திரா, தெலுங்கானா, கோவா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு கே எஸ் ஆர் டி சி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழக அரசு நேற்று இரவு வெளியிட்ட அறிவிப்பில், கர்நாடக பேருந்துகள் தமிழகத்திற்கு இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகள் வசதிக்காக தமிழக அரசு இந்த அனுமதியை வழங்கியுள்ளது. இதனால் தமிழகத்திற்கு கர்நாடக அரசுப் பேருந்துகள் போக்குவரத்து நேற்று இரவு முதல் தொடங்கி உள்ளது.

8 மாதங்களுக்குப் பின் கர்நாடக அரசுப் பேருந்துகள் தமிழகத்துக்குள் இயக்கப்படுவதால் ஓசூர் பகுதி மக்களும், பெங்களூர் பகுதி தமிழ் மக்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். வரும் 16ம் தேதி வரை இந்த அனுமதியை தமிழக அரசு வழங்கி இருந்தது.

இந்நிலையில், சற்றுமுன் தமிழக முதலமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவில், "தமிழகம் - கர்நாடகா இடையே வரும் 16ஆம் தேதிக்கு பிறகும் பேருந்துகள் இயக்கப்படும்" என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm new order tn karnataka bus service


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->