தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!  - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் தமிழக முதல்வர் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் நடத்த இருந்தி நிலையில், பிரதமருடன் தமிழக முதல்வர் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளதால், இந்த ஆய்வுக் கூட்டம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடராக இது தொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்வர் பழனிசாமி மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற் கொண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் பற்றியும் மாவட்ட ஆட்சியர், அனைத்து துறை அரசு அலுவலர் களுடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்தந்த மாவட்டங் களில் நிறைவடைந்த திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பல்வேறு துறைகள் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

மாவட்டத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பின் நிர்வாகிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுடன் கலந் தாய்வு மேற்கொண்டு வருகிறார். இதுவரை 24 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆய்வுப் பணியை மேற்கொண்டுள்ளார்.

வரும் 22-ம் தேதி காலை ராமநாதபுரம், மதியம் தூத்துக்குடி, 23-ம் தேதி காலை கன்னியாகுமரி, மதியம் விருது நகர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாநில முதல்வர்களுடன் பிரதமர் வரும் 23-ம் தேதி காணொலி மூலம் கலந்தாய்வுக் கூட்டம் நடத்த உள்ளார். இதில் முதல்வர் பழனிசாமி கலந்துகொள்ள இருப்பதால், முதல்வரின் சுற்றுப்பயண நிகழ்ச்சியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 22-ம் தேதி (நாளை) ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் மட்டும் முதல்வர் பங்கேற்கிறார். மற்ற 3 மாவட்டங்களில் நடக்க இருந்த ஆய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆய்வு நடைபெறுவது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்.

முதல்வர் 21-ம் தேதி (இன்று) சென்னையில் இருந்து விமானத் தில் மதுரை சென்றடைந்து, மதுரையில் தங்குகிறார். 22-ம் தேதி காலை மதுரையில் இருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக ராமநாதபுரம் சென்று, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். அன்று மாலை மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை திரும்புகிறார்." என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm meeting cancel at 3 districts


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->