பொங்கலோ பொங்கல்., மாட்டு பொங்கல்., முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் நேற்று தைப்பொங்கலை முன்னிட்டு வீடுகள் தோறும், தங்கள் பணி புரியும் நிறுவனங்களிலும், கல்லூரிகளிலும் தை பொங்கல் விழா கொண்டாடபட்டது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் இந்த தைப்பொங்கலை பொங்கல் வைத்து இயற்கை கடவுள்களில் ஒருவரான சூரிய பகவானுக்கு தங்களது நன்றி கடனை செலுத்தினர்.

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நேற்று அவனியாபுரத்தில் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.

இன்று உழவுக்கு பெரும் உதவியாக இருக்கும் காளைகளுக்கும், பசுக்களுக்கும், கால்நடைகளுக்கும் தங்களது நன்றியை செலுத்தும் வண்ணம் இன்று மாட்டுப்பொங்கல் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி மாட்டுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில்,

"உழவனின் உற்ற நண்பனாய், நம் தாய்த்தமிழ் மக்களின் வாழ்வியலில் இரண்டற கலந்து தூய அன்பினை என்றும் பகிரும் கால்நடைகளுக்கான இந்த மாட்டுப்பொங்கல் திருநாளில் உழவு செழிக்கட்டும், உழவர் மகிழட்டும் என என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm mattu pongal wish


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->