தமிழர்களை பெரிதும் அச்சத்தில் ஆழ்த்திய விவகாரம்! தமிழக முதல்வர் அதிரடி விளக்கம்! - Seithipunal
Seithipunal


மூன்று நாள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று இறுதி நாள் கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை 110 விதியின் கீழ் அறிவித்து வருகிறார், அதில், வரதட்சணை கொடுமைக்கு அதிகபட்ச தண்டனையாக 7 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டு இருந்ததை, 10 வருடங்களாக உயர்த்தி தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும், "பாலியல் தொழிலுக்காக பெண்களை விற்பது, வாங்குவது தொடர்பான குற்றத்திற்கு அதிகபட்ச ஆயுள் தண்டனை வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். பெண்களை பின்தொடரும் குற்றத்திற்கு 5 ஆண்டில் இருந்து 7 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது." என 
முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

புதிய கல்வி கொள்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற கூறினார். மேலும், குலக்கல்வி திட்டத்தின் மறு உருவம் புதிய கல்விக் கொள்கை என்றும், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். அதில், "தமிழக அரசு இரு மொழி கொள்கையை தொடர்ந்து பின்பற்றும். புதிய தேசிய கல்வி கொள்கை வந்துள்ளது. ஒரு திட்டம் வரும் போது அதனை ஆய்வு செய்ய வேண்டும். 

அதனால் தான் இந்த புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து ஆய்வு செய்ய, பள்ளி கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை சார்பாக ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு கொடுக்கும் அறிக்கையை பார்த்த பின் தமிழக அரசு ஆலோசனை செய்து நல்ல முடிவை எடுக்கும். கவலை வேண்டாம். அதில் வேறு எந்த கருத்தும் கிடையாது." என்று தமிழக முதலவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm explain for new education policy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->