சசிகலா விடுதலை.! டெல்லி புறப்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.! வெளியான பரபரப்பு தகவல்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக நாளை டெல்லி டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

தமிழ்நாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பிரதமரை நேரில் சென்று கேட்பதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி நாளை டெல்லி புறப்படுகிறார். நாளை மறுநாள் பிரதமர் மோடியை நேரில் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி-க்கு, தமிழக முதல்வர் அழைப்பு விடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமருடனான இந்த சந்திப்பில், தமிழக முதல்வர் அரசியல் ரீதியாகவும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக முதல்வர் பிரதமருடனான சந்திப்பில் அதிமுக பாஜக கூட்டணி கூட்டணி குறித்தும், அதிமுக தலைமையிலான கூட்டணியில்  முதல்வர் வேட்பாளரை உறுதி செய்வது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் 27ஆம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகி வெளியே வருகிறார் என்பதால், அது சம்பந்தமாக தமிழகத்தில் நிலவும் பல்வேறு அரசியல் மாற்றங்கள் குறித்தும் பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி கலந்து ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் பிரதமருடனான தமிழக முதல்வரின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் நிபுணர்களால் கருதப்படுகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேச உள்ளதால் நாளை மறுநாள் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் தெரிகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM EPS MEET PM INFO


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->