#சற்றுமுன்: நலத்திட்டங்கள் குறித்து தமிழக முதல்வர் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் கந்தம்பட்டியில் ரூ.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினர். சேலத்தில் மொத்தம் ரூ.40 கோடி மதிப்பில், 3 புதிய பாலம் பணிக்கு அடிக்கல்  நாட்டினார்.

அடிகள் நாட்டிய பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியவை, போக்குவரத்து நெரிசல் ஏற்பட கூடாது என்பதற்காகவே உயர்மட்ட பாலம். பல்வேறு துறைகள் சார்பில் 4,049 பயனாளிகளுக்கு ரூ.12.26 கோடி மதிப்பில் நலத்திட்டங்களை அறிவித்துள்ளார்.

திட்டங்கள் எதையும் தேர்தலுக்காக அறிவிக்கவில்லை, மக்களின் தேவைக்காக அறிவிக்கப்படுகிறது. பொங்கல் பரிசை தடுக்க திமுக முயற்சி செய்தது. மக்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதை வழக்கு போட்டு தடுக்க முயன்றது திமுக தான்.

ஏழைகளுக்கு தேவையான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களிடம் அதிமுக அரசு அதிக வரவேற்பை பெற்றுள்ளது.  கிராம சபை கூட்டத்தில் அரசை பற்றி ஸ்டாலின் தவறான தகவல்களை கூறி வருகிறார்.

அரசின் நலத்திட்ட சாதனைகள் குறித்த புள்ளி விவரங்கள் தெரியாமல் ஸ்டாலின் பேசி வருகிறார்.   தமிழக முழுவதும் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM Edappadi Palaniswami Press Meet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->