அதிமுக கட்சியும், ஆட்சியும் ஓபிஎஸ் கைக்கு மாற்றம்.? குழப்பத்தில் அதிமுகவினர்!! - Seithipunal
Seithipunal


தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 14 நாட்கள் அரசு முறை பயணமாக வெளிநாடு செல்ல உள்ளார். தமிழகத்தில் தொழில் துறையில் வளர்ச்சிக்காக வெளிநாட்டு முதலீடுகளை கவரும் வகையில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து வெளிநாட்டு முதலீடுகளை கவர்வதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 5 நாடுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். 

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு செல்ல உள்ள நிலையில், ஓ .பன்னீர்செல்வம் ஆட்சி மற்றும் கட்சி பொறுப்பை கவனிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு சுற்றுப் பயணம் இருப்பதால், அந்த இரண்டு வார காலத்திற்கு ஓபிஎஸ் கட்சி மற்றும் ஆட்சிப் பொறுப்பை கவனிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஓ.பன்னீர்செல்வத்துக்கு முழு அதிகாரத்தை கொடுக்க முதலமைச்சர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. சில நாட்கள் முன்பு அதிமுகவில் இரட்டை தலைமை என சில நிர்வாகிகள் பேசியது அதிர்வலைகளை உண்டாக்கியது. இப்போது ஆட்சி ஓ.பன்னீர்செல்வம் கையில் கொடுத்தால் பிரச்சனை வருமோ என்ற சந்தேகத்தில் முதலமைச்சர் தரப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm edappadi palanisamy foreign tour


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->