திமுக என்பது ஒரு குடும்ப கட்சி, கம்பெனி - முதல்வர் அதிரடி பேச்சு.! - Seithipunal
Seithipunal


திமுக என்பது ஒரு குடும்ப கட்சி, கம்பெனி என்று தமிழக முதல்வர் விமர்சித்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதன்போது தமிழக முதல்வர் பேசுகையில், " திமுக ஆட்சியில் மக்கள் அதிகளவு துன்பப்பட்டு வந்தார்கள். மின்வெட்டு பிரச்சனை இருந்தது. தற்போதைய ஆட்சியில் எந்த பிரச்சனையும் இல்லை. 

மக்களுக்காக செயல்பட்டு வரும் எனது தலைமையிலான அதிமுக அரசு மிகச்சிறப்பாக செயல்ப்பட்டு வருகிறது. மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மு.க ஸ்டாலினுக்கு முன்னர் கருணாநிதி, மு.க ஸ்டாலினுக்கு பின்னர் உதயநிதி என்று திமுக குடும்ப கம்பெனி ஆட்சி தொடரும். அந்த நிலைக்கு மக்கள் வாக்களித்து வாய்ப்பு கொடுக்க கூடாது. திமுக என்பது ஒரு குடும்ப கட்சி, கம்பெனி. அதிமுக வெற்றியடைந்து மீண்டும் மக்களுக்கான பணியை செய்ய வாய்ப்பளியுங்கள் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM Edappadi Palanisamy Election Campaign at Kanyakumari TN Election 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->