குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடிக்கு., தமிழக முதல்வர் கடிதம்.! - Seithipunal
Seithipunal


நவம்பர் 14-ம் தேதியான இன்று நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்திய குடியரசு தலைவர், இந்திய பிரதமர், தமிழக ஆளுநர், தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அன்னை மகாலட்சுமி துணையுடன் நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இத்தீபத் திருநாள், அறத்தின் ஆட்சியையும், ஆணவத்தின் வீழ்ச்சியையும் குறிக்கின்ற நாளாகவும், காரிருள் மறைந்து, அறிவொளி பிறந்து, இன்பமும், இனிமையும் நிறைந்த நன்னாளாகவும் விளங்குகிறது.

தீபாவளித் திருநாளில், மக்கள் அனைவரின் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகி, நலமும், வளமும் பெற்று இன்புற்று வாழ வேண்டும் என்று வாழ்த்தி பல அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், குடியரசுத் தலைவர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மூவருக்கும் தனித்தனியாக மலர்க்கொத்துக்களுடன் தீபாவளி வாழ்த்து கடிதங்களையும் முதல்வர் பழனிசாமி அனுப்பிவைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm diwali wish to pm


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->