தமிழக பட்ஜெட் 2020 : விவசாயிகளுக்காக புதிய திட்டம் அறிமுகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 9வது முறையாக 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

முத்திரைத்தாள் வாரி 1 சதவீதத்திலிருந்து 1.25 சதவீதமாக குறைப்பு. 

மாற்று திறனாளிகள் நலனுக்காக ரூபாய் 667 கோடி ஒதுக்கீடு. 

இளைஞர் நலனுக்காக ரூபாய் 218 கோடி ஒதுக்கீடு.

அத்திகடவு - அவினாசி திட்டத்துக்கு இந்த ஆண்டு ரூபாய் 500 கோடி ஒதுக்கீடு. 

காவிரி - குண்டாறு இனிஅப்பு திட்டம் - முதல் கட்டமான காவிரி முதல் வெள்ளாறு வரை இணைப்பு கால்வாய் அமைக்கப்படும். 

இணைப்பு கால்வாய் அமைக்க நிலம் கையகப்படுத்த, பணி மேற்கொள்ள ரூபாய் 700 கோடி ஒதுக்கீடு. 

பக்கிங்காம் கால்வாய், கூவம், அடையாறு வடிகால்களை மறுசீரமைக்க ரூபாய் 5439.76 கோடி ஒதுக்கீடு. 

தமிழகத்தின் மொத்த வருவாய் - ரூபாய் 219375 கோடி. தமிழகத்தின் மொத்த செலவு ரூபாய் 241601 கோடி. தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூபாய் 22225 கோடி.

2018 - 2019 ஆம் நிதி ஆண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 8.1 7%, 2019 - 2020 ஆம் நிதியாண்டின் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27%, இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதத்தை விட கடந்த ஆண்டு தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 5% அதிகரிப்பு. வரும் நிதியாண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு.

கீழடியில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த அகழ்வைப்பகம் அமைக்க ரூபாய் 12 கோடி ஒதுக்கீடு.

நடப்பாண்டில் 10,726 சீருடை பணியாளர்கள் புதிதாக பணி அமர்த்தப்படுவார்கள். 

சிறப்பு போக்ஸோ நீதிமன்றங்கள் உட்பட கட்டடங்களுக்கு ரூபாய் 1317 கோடி ஒதுக்கீடு. 

விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை உயர்வு. 

விவசாயிகளின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் அறிமுகம்.  

உழவர் பாதுகாப்பு திட்டத்திற்காக ரூபாய் 200 கோடி ஒதுக்கீடு. 

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் மெகா உணவு பூங்கா அமைக்க ஒப்புதல். 

906 குளங்கள், 183 அணைக்கட்டுகள் சீரமைத்தல், 37 சேர்க்கை செறிவூட்டல் கிணறுகள் அமைக்க ரூபாய் 649 கோடி ஒதுக்கீடு. 

8 மாவட்டங்களின் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் அமைக்கப்படும்.  திருத்திய நெல் சாகுபடி 27.18 லட்சம் ஏக்கருக்கு விரிவுபடுத்தப்படும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn budget new plan for farmer


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->