தமிழக பட்ஜெட் 2020: மரணமடைவோரின் இழப்பீடுகளை உயர்த்தியது தமிழக அரசு..!!  - Seithipunal
Seithipunal


மிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் 9வது முறையாக 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தற்போது நிதி அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பட்ஜெட்டை வாசித்து வருகிறார், அதில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு பெருந்திட்ட வளாகம் அமைக்க ரூபாய் 650 கோடி ஒதுக்கீடு. 

தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ 74 கோடி ஒதுக்கீடு. சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் திட்டங்களுக்கு ரூபாய் 4 ஆயிரத்து 315 கோடி ஒதுக்கீடு.

பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூபாய் 1360 கோடி ஒதுக்கீடு. சென்னையில் வெள்ளை பாதிப்பை குறைக்க ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு. தமிழக காவல்துறைக்கு ஒரு ரூபாய் 8876 கோடி ஒதுக்கீடு. 

தீயணைப்பு துறைக்கு ரூபாய் 405 கோடி ஒதுக்கீடு. சிறைத் துறைக்கு ரூபாய் 392 கோடி ஒதுக்கீடு. சாலை பாதுகாப்பு திட்டங்களுக்காக ரூபாய் 1403 கோடி ஒதுக்கீடு. சென்னை, மதுரை, கோவை மாநகரங்களில் சாலை பாதுகாப்பு பிரிவுகளை ஏற்படுத்தப்படும். நீதி நிர்வாகத்திற்காக ரூபாய் 1403 கோடி ஒதுக்கீடு செய்துள்ளனர்.

மத்திய அரசின் தொலைநோக்கு திட்டங்கள் அடங்கிய தமிழகத்தில் 129 திட்டங்கள் சேர்ப்பு.. வேளாண் மண்டலம் விவசாயத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளின் நுண்ணுயிர் பாசன திட்டத்தில் ரூபாய் 75 கோடி ஒதுக்கீடு செய்துள்ளனர்.

இதை தொடர்ந்து, தமிழக பட்ஜெட்டில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட்டில் ஒரே நாடு, ஸ்மார்ட் ரேஷன் கார்டு இருந்தால், எந்த கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என அறிவிப்பு

துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு இருந்தால், எந்த கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என அறிவிப்பு.

மேலும், விபத்தில் மரணம் அடைபவர்களுக்கு ரூ.4 லட்சமாக இழப்பீடை உயர்த்தப்படும் என்று ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
 
துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் விபத்தில் அகால மரணம் அடைவோருக்கான இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

மேலும் இயற்கை மரணங்களில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தரப்படும் இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn budget 2020 govt increase Compensation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->