எஸ்கேப் ஆன ஸ்டாலினை பங்கப்படுத்திய பாஜக.! கலங்கி நிற்கும் ஸ்டாலின்.!   - Seithipunal
Seithipunal


கொரோனா பாதிப்பு நிவாரணத்திற்கு தமிழக எதிர்கட்சியான திமுக ரூபாய் ஒரு கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது. இதனை தமிழக பாரதிய ஜனதா கடுமையாக சாடியுள்ளது. 

கரோனா வைரஸ்னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அரசிடம் கோரி வருகிறது. தமிழக அரசுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். 

தமிழகத்தை சார்ந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி பாராளுமன்ற நிதியிலிருந்து மருத்துவ உபகரணங்கள் வாங்க மருத்துவ வசதிகளை அதிகப்படுத்த அரசாங்கத்திற்கு உதவி செய்து வருகின்றனர். இதன் பொருட்டு 50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை நிதி உதவி செய்துள்ளனர். 

திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பேரிடர் மீட்பு பிரிவிற்கு ரூபாய் ஒரு கோடி வழங்கப்படும் என்று அந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருந்தார். ஆனால், பாஜகவை தங்கள் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அவரவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடியை பிரதமரின் நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரின் செயலை தமிழக பாஜக கடுமையாக சாடியுள்ளது. அதில் தொகுதி வளர்ச்சி பணத்தை கொண்டு அறிவாலயம் உருவாக்க செலவு செய்த ஸ்டாலின், சொந்த மக்களுக்கு வெறும் ஒரு கோடி ரூபாய் கொடுக்கத்தான் மனம் உள்ளதா.? ஆட்சியிலிருந்த போது அட்சய பாத்திரத்தில் நினைத்ததெல்லாம் கிடைத்தது போல ஊழல் செய்த பணத்தை மக்களுக்கு தானமாக அளிக்க கூடாதா.?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn bjp tweet about stalin


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->