தமிழக பாஜக அலுவகளத்தில் பணிபுரியும் இருவர் மருத்துவமனையில் அனுமதி.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினமும் அதிகரித்து கொண்டு வந்த கொரோனா பரவலின் காரணமாக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். 

தமிழக அரசும் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தி உள்ளது. மேலும் கொரோனா தடுப்பொஸ்ஸியை எடுத்து கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில், பாஜகவின் தமிழக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பணிபுரியும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை தியாகராயநகர் வைத்தியராமன் தெருவில் பாஜகவின் தமிழக தலைமை அலுவலகமான கமலாலயம் அமைந்துள்ளது. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் தவிர மாநில நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் பலர் தினமும் வந்து செல்வது வழக்கம். 

தேர்தல் முடிந்துள்ள காரணத்தினால் அலுவலகத்துக்கு கட்சி நிர்வாகிகள் யாரும் வராமல், ஊழியர்கள் மட்டுமே இருந்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக அலுவலக ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn bjp office staffs affected corona


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->